என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிஎன்பிஎல் கிரிக்கெட்"
- திருச்சி, திண்டுக்கல் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன.
- நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நெல்லை:
8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந்தேதி சேலத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் நடைபெற்றது. தற்போது நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் 3-வது கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.
நேற்றுடன் 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 6 ஆட்டத்தில் 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
திருச்சி, திண்டுக்கல் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. அதே நேரத் தில் திண்டுக்கல்லுக்கு இன்னும் 2 ஆட்டம் இருக்கிறது. திருச்சி அணிக்கு ஒரே ஒரு போட்டியே உள்ளது.
நெல்லை 5 புள்ளியுட னும், திருப்பூர் தமிழன்ஸ் 4 புள்ளியுடனும், மதுரை 3 புள்ளியுடனும், சேலம் 2 புள்ளியுடனும் உள்ளன.
டி.என்.பி.எல். போட்டியின் 23-வது ஆட்டம் நெல்லையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அதே நேரத்தில் நெல்லை அணி 5 புள்ளியுடன் இருக்கிறது. திருப்பூர் அணி 4 புள்ளியுடன் உள்ளது.
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.
- திருச்சி அணி 3 வெற்றி, 2 தோல்வியுன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாசை நாளை எதிர் கொள்கிறது.
நெல்லை:
8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி சேலத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் நடைபெற்றது. தற்போது நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் 3-வது கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது
இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி முதல் ஆட்டத்தில் கோவை கிங்சிடம் 13 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. 3-வது ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 15 ரன்னிலும், 4-வது போட்டியில் திண்டுக்கல் டிராகன்சை 9 விக்கெட் வித்தியாசத்திலும், 5-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சை 23 ரன்னிலும் வீழ்த்தியது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாசை நாளை (திங்கட்கிழமை) இரவு 7.15 மணிக்கு எதிர்கொள்கிறது.
பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சியை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங்கில் ஜெகதீசன் (159 ரன்), கேப்டன் பாபா அபராஜித் (143 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (122 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் அபிஷேக் தன்வர், பெரியசாமி (தலா 7 விக்கெட்), டேரில் பெரா ரியோ, ரகில்ஷா (தலா 5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
திருச்சி அணி 3 வெற்றி, 2 தோல்வியுன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மதுரை, சேலம், நெல்லை ஆகியவற்றை வென்றது. திண்டுக்கல், கோவையிடம் தோற்றது. திருச்சி அணியும் 4-வது வெற்றி வேட்கையில் உள்ளது.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் திண்டுக்கல்-கோவை (மாலை 3.15), திருப்பூர்-சேலம் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன.
- 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
- திருச்சி வெற்றி பெற்றால் 6 புள்ளியை பெறும்.
நெல்லை:
8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி சேலத்தில் தொடங்கியது. 11-ந் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது. 9 ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் கடந்த 13-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 8 போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.
இதுவரை 17 ஆட்டங்கள் முடிந்துள்ளன. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 8 புள்ளியுடனும், 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 புள்ளியுடனும், நெல்லை ராயல் கிங்ஸ் 5 புள்ளியுடனும் முதல் 3 இடங்களில் உள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் தலா 4 புள்ளிகளுடனும், மதுரை பாந்தர்ஸ் 3 புள்ளியுடனும், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 2 புள்ளிகளுடனும் உள்ளன.
டி.என்.பி.எல். போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் இன்று தொடங்குகிறது. வருகிற 24-ந் தேதி வரை அங்கு 6 போட்டிகள் நடத்தப்படுகிறது.
நெல்லை இந்திய சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை-திருச்சி அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை அணி மோதிய ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அந்த அணி வெற்றி பெற்றால் 7 புள்ளியுடன் முன்னேறும். திருச்சி வெற்றி பெற்றால் 6 புள்ளியை பெறும்.
- நெல்லை வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
- சேலத்துக்கு 2-வது தோல்வியாகும்.
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சேலத்தில் நடந்த 9-வது லீக்கில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த சேலம் அணி 19.2 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராபின் பிஸ்ட் 23 ரன்னும், கேப்டன் ஷிஜித் சந்திரன் 20 ரன்னும் எடுத்தனர். நெல்லை வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
அடுத்து களம் இறங்கிய நெல்லை அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. அஜிதேஷ் 45 ரன்னும், சூர்யபிரகாஷ் 43 ரன்னும் (நாட்-அவுட்) விளாசினர். நெல்லைக்கு இது 2-வது வெற்றியாகும். சேலத்துக்கு 2-வது தோல்வியாகும்.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். அடுத்த கட்ட ஆட்டங்கள் கோவையில் நடைபெறுகிறது. கோவையில் நாளை நடைபெறும் ஆட்டங்களில் மதுரை பாந்தர்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் (மாலை 3.15 மணி), கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் (இரவு 7.15 மணி) அணிகள் சந்திக்கின்றன.
- சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 5 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.
- மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
கோவை:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) தலைவர் சஞ்சய் கும்பட் மற்றும் நிர்வாகிகள் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
டி.என்.பி.எல். 8-வது கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூலை 5-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 5 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.
லீக் போட்டிகள் ஜூலை 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சேலத்திலும், ஜூலை 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கோவையிலும், ஜூலை 20-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை நெல்லையிலும், ஜூலை 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திண்டுக்கல்லிலும் நடைபெற உள்ளன.
குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் ஜூலை 30 மற்றும் 31-ந் தேதி திண்டுக்கலில் நடக்கிறது. 2-வது குவாலிபையர் மற்றும் இறுதிப்போட்டிகள் ஆகஸ்டு 2 மற்றும் 4-ந் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
இரவு 7.15 மணிக்கு போட்டிகள் தொடங்கும். இரண்டு போட்டிகள் நடக்கும் சமயத்தில் மதியம் 3.15 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்ட்டன்ஸ் சீகம், மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பேட்டியின்போது தமிழ் நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி, இணை செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா உள்பட கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- டி.என்.பி.எல். தொடரின் தொடர் நாயகன் விருது அஜிதேஷ் வென்றார்.
- ஆட்ட நாயகன் விருது கோவை அணியின் ஜத்வேத் சுப்ரமணியம் வென்றார்.
நெல்லை:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. சுரேஷ் குமார், அதீக் ரஹ்மான், முகேஷ் அரை சதமடித்தனர். அடுத்து ஆடிய நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரின் தொடர் நாயகன் விருது மற்றும் ஆரஞ்சு கேப் விருதை நெல்லை அணியின் அஜிதேஷ் குருசாமி வென்றார்.
பர்பிள் கேப் விருது 17 விக்கெட்டுகள் வீழ்த்திய கோவை அணி கேப்டன் ஷாருக் கானுக்கு அளிக்கப்பட்டது.
ஆட்ட நாயகன் விருது 4 விக்கெட் வீழ்த்திய கோவை அணியின் ஜத்வேத் சுப்ரமணியம் வென்றார்.
- முதலில் ஆடிய கோவை அணி 205 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய நெல்லை 101 ரன்னில் ஆல் அவுட்டானது.
நெல்லை:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நெல்லையில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் 57 ரன்களில் அவுட் ஆனார். முகேஷுடன் இணைந்த அதீக் ரஹ்மானும் அதிரடியாக ஆடினார். இருவரும் அரை சதம் அடித்தனர். அதீக் ரஹ்மான் 50 ரன்னில் அவுட்டானார். முகேஷ் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நெல்லை சார்பில் சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. கோவை அணியின் துல்லிய பந்துவீச்சில் நெல்லை அணி சிக்கியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தது.
இறுதியில், நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.
கோவை கிங்ஸ் சார்பில் ஜத்வேத் சுப்ரமணியம் 4 விக்கெட்டும், ஷாருக் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுரேஷ் குமார் 57 ரன்கள் சேர்த்தார்.
- பந்துவீச்சில் நெல்லை தரப்பில் சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நெல்லை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நெல்லையில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் லைக்கோ கோவை கிங்ஸ், நெல்லைராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சுஜய் 7 ரன்னிலும், சச்சின் பேபி 12 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின் சுரேஷ் குமார், முகேஷ் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது.
அரை சதம் கடந்த சுரேஷ் குமார் 57 ரன்களில் அவுட் ஆனார். கேப்டன் ஷாருக்கான் 7 ரன்களே எடுத்தார். இதையடுத்து முகேசுடன் இணைந்த அதீக் ரஹ்மானும் அதிரடியாக ஆடினார். இருவரும் அரை சதம் அடித்தனர். இதனால் கோவை அணி 20 முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது.
நெல்லை தரப்பில் சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.
- கோவை கிங்ஸ் அணி 2-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
- தனது முதல் இறுதி ஆட்டத்திலேயே சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் நெல்லை அணி உள்ளது.
நெல்லை:
7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 12-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியின் பிளே ஆப் சுற்று போட்டிகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. அன்று நடந்த முதல் தகுதிச்சுற்றில் (குவாலிபயர் -1) கோவை கிங்ஸ் அணி 30 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சனிக்கிழமை நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.
நெல்லையில் நடந்த 2-வது தகுதிச்சுற்றில் (குவாலிபயர்-2) நெல்லை ராயல் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், டி.என்.பி.எல். இறுதிப்போட்டி நெல்லையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ், அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டி.என்.பி.எல். கோப்பையைக் கைப்பற்றப் போவது கோவையா, நெல்லையா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
கோவை கிங்ஸ் அணி 2-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் இணைந்து கூட்டாக சாம்பியன் பட்டம் பெற்றது.
கோவை அணி லீக் ஆட்டத்தில் நெல்லையிடம் 181 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. அதற்கு இறுதிப்போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் கோவை கிங்சுக்கு இருக்கிறது. அந்த அணி இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று இருந்தது. தனது முதல் இறுதி ஆட்டத்திலேயே சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் நெல்லை ராயல் கிங்ஸ் உள்ளது. கோவையை லீக் ஆட்டத்தில் வென்றுள்ளதால் நெல்லை அணி நம்பிக்கையுடன் விளையாடும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு நெல்லை ராயல் கிங்சுக்கு கூடுதல் பலமாகும்.
- கோவை அணி லீக் ஆட்டத்தில் நெல்லையிடம் 181 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது.
- அதற்கு இறுதி போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் கோவை கிங்சுக்கு இருக்கிறது.
நெல்லை:
7- வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 12- ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் லீக் ஆட்டங்கள் 5- ந் தேதியுடன் முடிவடைந்தது.
பிளே ஆப் சுற்று போட்டிகள் 7- ந் தேதி தொடங்கியது. அன்று நடந்த முதல் தகுதி சுற்றில் (குவாலிபயர் -1) கோவை கிங்ஸ் அணி 30 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சனிக்கிழமை நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.
நெல்லையில் நேற்று நடந்த 2- வது தகுதி சுற்றில் (குவாலிபயர்-2) நெல்லை ராயல் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று ஓய்வு நாளாகும். இறுதிப்போட்டி நெல்லையில் நாளை (12- ந் தேதி) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் - அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
டி.என்.பி. எல். கோப்பை கைப்பற்றப்போவது கோவையா? நெல்லையா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
கோவை கிங்ஸ் அணி 2-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் இணைந்து கூட்டாக சாம்பியன் பட்டம் பெற்றது.
கோவை அணி லீக் ஆட்டத்தில் நெல்லையிடம் 181 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. அதற்கு இறுதி போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் கோவை கிங்சுக்கு இருக்கிறது. அந்த அணி இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று இருந்தது.
தனது முதல் இறுதி ஆட்டத்திலேயே சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் நெல்லை ராயல் கிங்ஸ் உள்ளது.
கோவையை லீக் ஆட்டத்தில் வென்று இருந்ததால் நெல்லை அணி நம்பிக்கையுடன் விளையாடும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு ராயல் கிங்சுக்கு கூடுதல் பலமாகும். அந்த அணி இந்த சீசனில் 7 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக 3 போட்டியில் வெற்றி பெற்று முத்திரை பதித்தது. 2 போட்டியில் தோற்றது.
- 44 பந்துகளில் 73 ரன்களை குவித்த அஜித்தேஷ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.
- 20 ஓவர் முடிவில் நெல்லை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அபாரமாக வென்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெறும் 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதின.
டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது.
திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் விமல் குமார் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், சிவம் சிங்-பூபதி குமார் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது.
குறிப்பாக சிவம் சிங் பந்துகளை சிக்சர்களாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
பூபதி குமார் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த சிவம் சிங் 76 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர் 46 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எட்டினார்.
அவரைத் தொடர்ந்து ஆதித்ய கணேஷ் 13 ரன்களிலும், சரத் குமார் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. சுபோத் 6 ரன்களுடனும், கேப்டன் பாபா இந்திரஜித் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார். சந்தீப் வாரியர், பொய்யாமொழி, லக்சய் ஜெயின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் களமிறங்கியது.
அஜித்தேஷ் குருசுவாமி அதிரடியாக விளையாடினார். 44 பந்துகளில் 73 ரன்களை குவித்த அஜித்தேஷ் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.
ரித்திக் ஈஸ்வரன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.
நிதிஷ் ராஜகோபால் மற்றும் அருண் கார்த்திக் தலா 26 ரன்களும், சுகேந்திரன் 22 ரன்களும் எடுத்தனர்.
19.4 ஓவரின்போது 2 பந்துக்கு 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அஜித்தேஷ் மற்றும் ரித்திக் விளையாடினர்.
இந்நிலையில், 20 ஓவர் முடிவில் நெல்லை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அபாரமாக வென்றது.
இதன்மூலம், நெல்லை ராயல் கிங்ஸ் 2வது குவாலிபையர் சுற்றில் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் நெல்லை ராயல் கிங்ஸ் மோதுகிறது.
- திண்டுக்கல் அணியில் சிவம் சிங்-பூபதி குமார் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது.
- சிவம் சிங் 46 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசினார்.
நெல்லை:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெறும் 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது.
திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் விமல் குமார் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், சிவம் சிங்-பூபதி குமார் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. குறிப்பாக சிவம் சிங் பந்துகளை சிக்சர்களாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பூபதி குமார் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த சிவம் சிங் 76 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர் 46 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எட்டினார்.
அவரைத் தொடர்ந்து ஆதித்ய கணேஷ் 13 ரன்களிலும், சரத் குமார் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. சுபோத் 6 ரன்களுடனும், கேப்டன் பாபா இந்திரஜித் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார். சந்தீப் வாரியர், பொய்யாமொழி, லக்சய் ஜெயின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் களமிறங்குகிறது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் மோதும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்